Promotional Centers & Contacts

FEBRUARY 2025

தெற்கு மண்டலச் செய்திகள்


  • கடந்த நாட்களில் சுமார் 4718 பேருக்கு கிறிஸ்துவின் நற்செய்தியினை கைப்பிரதிகளின் வாயிலாகவும் மற்றும் நற்செய்தி அறிவிப்பின் மூலமாகவும் பகிர்ந்துகொள்ள கர்த்தர் உதவிசெய்தார். 
  • வனாஞ்சல் கோட்டத்தில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டங்களின் மூலமாக பணித்தள மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. 
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் லோஹிங்கா மற்றும் புர்குண்டா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களில், 200-க்கும் மேலானோர் பங்குபெற்று நற்செய்தியைக் கேட்டனர். 
  • டாட்டா பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூடுகையில், 45 விசுவாசிகள் பங்கேற்றனர். விசுவாசத்தில் பெலப்படவும், கிறிஸ்துவுக்காகச் செயல்படவும் மற்றும் தங்கள் அர்ப்பணிப்பினைப் புதுப்பித்துக்கொள்ளவும் இக்கூடுகை வகைசெய்தது. 
  • முண்டா பழங்குடி சமுகத்தைச் சேர்ந்த 28 இளைஞர்களைச் சந்திக்கவும் மற்றும் கிறிஸ்துவின் அன்பினை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் கிருபை பராட்டினார். 
  • பணித்தளங்களில் செய்யப்பட்ட சிறுவர் ஊழியங்களின் மூலம், சிறுவர் சிறுமியர்களுக்கு பாடல்கள், வேதாகமச் சம்பவங்கள் மற்றும் மிஷனரிச் சாட்சிகளின் வாயிலாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், மற்றும் அவர்களது பெற்றோர்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார்.  
  • சத்தர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 50 பேரும் மற்றும் முகமத்கஞ் பணித்தளத்தில் நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 150 விசுவாசிகள் பங்கேற்று கர்த்தருடைய வசனத்தைக் கேட்டனர். 
  • உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவோடு தங்களை இணைத்துக்கொண்ட விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நிற்கவும், சுகவீனமாயிருக்கும் பணித்தள மக்களுக்காகவும் மற்றும் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும சிறுவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.