March 2025

 தெற்கு மண்டலம்


  • சோன்பத்ரா கோட்டப் பணித்தளங்களில் நடைபெற்ற பல்வேறு நற்செய்தி மற்றும் சுகமளிக்கும் கூட்டங்களில், அநேகர் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதுடன், வியாதிகளிலிருந்தும் அநேகர் விடுதலையடைந்தனர். அத்துடன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சமாதானப் புருஷர்களுக்கானக் கூடுகையில் 30 பேர் பங்கேற்றனர்; தேவனுக்கே மகிமை!
  • மஜியான், நகர்-உண்டாரி மற்றும் முகமத்கஞ்ச் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூட்டங்களில்145 பேர் கலந்துகொண்டு, பணித்தள ஊழியங்களுக்காகவும், தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். 
  • பெத்லா பணித்தளத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமின் வாயிலாக 155 பேர் பயனடைந்தனர். 
  • 'ஆயத்தமாகு மற்றவர்களை ஆயத்தப்படுத்து' என்ற கருப்பொருளின் கீழு; கடுவா பணித்தளத்தில் நடைபெற்ற ஊழியர் கருத்தரங்கு மிகுந்த ஆசீர்வாதமாக அமைந்தது. இக்கருத்தரங்கில் 67 ஊழியர்கள் கலந்துகொண்டனர். மேலும், ராஜ்ஹரா பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான ஒருநாள் சிறப்புக் கூட்டத்திலும் விசுவாசிகள் உற்சாகமாகப் பங்கேற்றனர். 
  • சத்தாரா மற்றும் ரஹ்மத்பூர் பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக 150 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார். 
  • மஹராஷ்டிராவில் ஜனவரி 2 முதல் பிப்ரவரி 6 வரையிலான நாட்களில் நடைபெற்ற தொடர் உபவாசக் கூடுகை மிகுந்த ஆசீர்வாதமாக அமைந்தது. இக்கூடுகையில், ஷிராலா மற்றும் குடோலி பணித்தள விசுவாசிகள் உற்சாகமாகக் கலந்துகொண்டு ஜனங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். 
  • உமரியா மற்றும் மணிக்வார் பணித்தளங்களில் கட்டப்பட்டுவரும் ஆலயங்களுக்காகவும், சுகவீனமாயிருக்கும் விசுவாசிகள் விரைவில் குணமடையவும், விசுவாசிகளின் பிள்ளைகளுக்கு ஏற்ற காலத்தில் திருமணம் நடைபெறவும் ஜெபிப்போம்.