ஜூலை 16 பிப்ராடி, கர்தோலி மற்றும் ஜப்லா பணித்தளங்களில் நடைபெற்ற இரவு ஜெபக்கூடுகைகளில் 206 பேர் பங்கேற்று பணித்தள ஊழியங்களுக்காகவும், தேசம் தேவனை அறியவும் பாரத்துடன் ஜெபித்தனர். புதிதாக ஆத்துமாக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும், புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோர் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் ஜெபிப்போம்.
ஜூலை 17 ஜுன் 8 அன்று ஜப்லா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் கூடுகையில் 90 வாலிபர் பங்கேற்றனர்; ஜெப வேளையில் வாலிபர் பலர் தேவனுக்கென்று தங்களை அர்ப்பணித்தனர். இக்கூடுகையில் பங்கேற்ற வாலிபர் கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழவும், பணித்தளங்களில் நடைபெறும் வாலிபர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
ஜூலை 18 ஜப்லா, பகர்டோலி, சுந்தர்பூர், கொலோபிரா, பின்ஜரிடிபா, சங்கராய், ஹைதர்நகர், முகமத்கஞ்ச் மற்றும் சிப்லூன் பணித்தளங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக 565 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். போக்ராயி பணித்தளத்தில் நடைபெற்ற சிறுவருக்கான சிறப்பு நிகழ்ச்சியில் 24 சிறுவர்கள் பங்கேற்றனர். பணித்தளச் சிறுவர்கள் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும், அவர்களது எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம்.
ஜூலை 19 ஜுன் 3 அன்று தேவ்காவ் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 200 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஜுன் 12 அன்று கோடோலி பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 25 பேர் பங்கேற்றனர்; இக்கூடுகையில் அருட்திரு திலீப் யாதவ் மற்றும் அருட்திரு சஞ்சய் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினர். புதிதாக நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்கள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
ஜூலை 20 கிவாஹி, சித்தி பணித்தளங்களில் நடைபெற்ற ஞாயிறு சிறப்புக் கூட்டங்களில் 350 பேர் பங்கேற்றனர். இக்கூடுகைகள் விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உற்சாகத்தை அளித்தன. புநுநேஒவ பயிற்சி மையத்தில் பயிற்சிபெறும் சகோதர சகோதரிகளுக்காகவும், பயிற்சியளிப்போருக்காகவும், இப்பயிற்சி வகுப்புகள் தடையின்றி நடைபெறவும் ஜெபிப்போம்.
ஜூலை 21 தோர்பா, பகாஸ்பூர் மற்றும் லோஹிங்கா பணித்தளங்களில் நடைபெற்ற சிறப்புக் கூட்டங்களையும் மற்றும் சார்ஹி பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையினையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். மேலும், பணித்தளங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகம பள்ளி ஊழியங்கள் மூலம் சிறுவர் சிறுமியரை கிறிஸ்துவின் அன்பில் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளக் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் பணித்தள ஊழியர்கள், விசுவாசிகளின் சரீர சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.





