Feb 2026

 


பிப்ரவரி 15 ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்தர்பூர், ஜப்லா, கர்வா பள்ளி, நௌதீஹா, கெருவா, இமாலியாதட், {ட்டுக்டாக், சர்திவா, சங்க்ராஹி, மொஹம்மத்கஞ்ச், பிட்கயி மற்றும் பெத்லா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சுவிசேஷக் கூட்டங்களின் வாயிலாக 1325 பேருக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. சிகோயி, பிர்பாடி, பொஜெங்கோ ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற கூடுகைகளில் 265 பேர் பங்கேற்று தேவ வசனத்தைக் கேட்டனர். இப்பணித்தளங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பின்தொடர் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.

பிப்ரவரி 16 மொஹமத்கஞ்ச் பணித்தளத்தில் 3 நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் ஜெபித்தனர்; இக்கூடுகையில், சகோ. ஜோ பால்சன், சகோ. சரவணன் மற்றும் சகோ. எட்வர்ட் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். போச்ரா, குத்துவா, கோயிரிடோல், பஜார் சமிதி, நஸ்ரியா, கட்ரு போன்ற பணித்தளங்களில் சுமார் 1000 பேருக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டு, சுவிசேஷக் கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் வழங்கப்பட்டன. இவர்களது இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.

பிப்ரவரி 17 சிஹவால், சுர்ஹாட், ஐதி, சித்தி, மான்பூர், உமரியா, சத்னா, மணிக்வார், கர்ரா, லோரி மற்றும் லால்கான் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளின் மூலமாக 3820 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், குளிர்கால ஆடைகளை வழங்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இச்சிறுவர்களின் வாழ்க்கையில் கிறிஸ்துவின் வார்த்தைகள் கிரியை செய்யவும், இவர்களது குடும்பத்தினர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 18 கோபர்டே பணித்தளத்தில் நடைபெற்ற இலவச மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமின் மூலமாக கிறிஸ்துவின் அன்பினையும் கூடவே அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார். பாண்டேதிஹ் மற்றும் பர்வாடி ஆகிய இரண்டு புதிய  கிராமங்களில் 4 பேர் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்; தேவனுக்கே மகிமை! புதிதாக ஆராதனையில் பங்குபெறும் விஷால் குமார், சிவா, தர்மேந்திரா, சோனா, சியாமணி மற்றும் பெலா ஆகியோர் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்க ஜெபிப்போம்.

பிப்ரவரி 19 உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் சுபா-சுவா, சோபன், டாலா, அன்பரா, சக்திநகர், பைதான் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களில் 1450 பேர் பங்கேற்றனர். மஹராஷ்டிரா மாநிலத்தில் பல பகுதிகளில் சுவிசேஷத்தைக் கேட்ட காவல்துறை பணியாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பிற மக்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் தொடப்படவும், தங்கள் பணிகளில் கிறிஸ்துவை வெளிப்படுத்தவும் ஜெபிப்போம்.