மார்ச் 16 : மசூர் மற்றும் சத்தாரா பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூட்டங்களில், சகோதரி தீபாலி லோகண்டே கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, பணித்தளங்களில் நடைபெற்ற விசேஷித்த ஜெபக் கூடுகைகளில், பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும், இரட்சிக்கப்படாத மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் ஒருமனதுடன் ஜெபிக்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் வீட்டு சபைகளை நடத்தும்படியாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர்களுக்காகவும் மற்றும் நடைபெற்றுவரும் வீட்டு சபைகளுக்காகவும் ஜெபிப்போம்.
மார்ச் 17 : சிப்லன் பணித்தளத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான கருத்தரங்கில், சகோதரர் மேக்நாத் பவார் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். சகோ. சுந்தர்ராஜ், சகோதரி கிரேஷ் லீனா மற்றும் சகோ. நிதின் ஆகியோர் மாணவர்களை உற்சாகமூட்டும் விளையாட்டுகளை நடத்தி, அவர்களுக்காக ஜெபித்தனர். தெற்கு மண்டலத்தில் மாணவர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும், மாணவர்களின் மேற்படிப்பு மற்றும் எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம்.
மார்ச் 18 : மல்கர் பணித்தளத்தில் முதியோர் இல்லத்திற்குச் சென்று முதியவர்களைச் சந்தித்து பரிசுகளை வழங்கவும், கிறிஸ்துவின் அன்பினை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் கிருபைசெய்தார். பணித்தளத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் சுவிசேஷத்திற்கான வாசல்கள் திறக்கப்பட ஜெபிப்போம்.
மார்ச் 19 : மகராஸ்ட்டிராவின் பல்வேறு பணித்தளங்களில் வேதாகமப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க கர்த்தர் வழிகளைத் திறந்தார். குடோலி பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில் 35 பேர் பங்கேற்று தேசத்திற்காக பாரத்துடன் ஜெபித்தனர்; போதகர் பிரகாஷ் திவாடே கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். வேதாகமப் பயிற்சி வகுப்புகள் வாயிலாக அநேக ஆத்தும ஆதாயகர்கள் உருவாக ஜெபிப்போம்.
மார்ச் 20 : ஷிராலா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் ஞாயிறு ஆராதனை ஆசீர்வாதமாகவும், அநேகருக்கு பிரயோஜனமாகவும் அமைந்தது. பிலாவாடி, மல்வாடி பணித்தளங்களில் பெண்களுக்கான சிறப்புக் கூட்டங்களுடன், அவர்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக, தையல் பயிற்சி மையங்களும் தொடங்கப்பட்டன. தொடர்ந்து, ஊழியர்களின் துணைவியருக்காக நடைபெற்ற கூடுகையில், சகோதரி ஸ்வாதி பவார் மற்றும் போதகர் சஞ்சய் பன்ஹல்கர் ஆகியோர் தேவ வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சுவிசேஷப் பணிகளுக்காகவும் மற்றும் ஊழியர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.
மார்ச் 21 : மார்ச் 5 முதல் 7 வரை பக்கார்டோலி பணித்தளத்தில் நடைபெறவிருக்கும் உபவாக் கூடுகைக்காகவும், அன்பரா பணித்தள ஆலயம் மீண்டும் தொடங்கப்படவும் மற்றும் பினா காலனி, ரேணு சாகர் காலணி, லாங்கோ காலனி, அன்பரா காலனி போன்ற பகுதிகளிலிருந்து புதிய ஆத்துமாக்கள் சபையில் சேரவும், வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் பெண்கள் கூடுகைகளுக்காகவும் ஜெபிப்போம்.
