May 2026

 



மே 16 ஜார்க்கண்ட் மாநிலத்தின் முகமத்கஞ்ச் மற்றும் பகர்டோலி ஆகிய இடங்களில் நடைபெற்ற பெண்கள்  கூட்டங்களில் 170 பேர் பங்கேற்றனர். ஜெம்ஸ் பெண்கள் ஊழியக் குழுவினரின் பாடல்கள், ஆராதனை நேரம், செய்திவேளைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள், பெண்களை ஆவிக்குரிய வாழ்க்கையில்  ஊக்கப்படுத்தியதுடன், ஆத்தும ஆதாயப் பணியிலும் அவர்கள் முன்னேற வழிகாட்டியது. பெண்கள் மூலமாக குடும்பங்களிலும் மற்றும் சமுதாயத்திலும் கர்த்தர் மாற்றத்தைக் கட்டளையிட ஜெபிப்போம். 

மே 17 ஜப்லா பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற இரவு ஜெபத்தில் 150 விசுவாசிகள் பங்கேற்று, பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் ஜெபித்தனர். தஸ்ரார் பணித்தளத்தில் கட்டப்பட்ட ஊழியர் இல்லத்தினை ஜெபத்துடன் அர்ப்பணிக்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆத்தும ஆதாயப் பணிகளுக்காகவும் மற்றும் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

மே 18 ஏப்ரல் 3 முதல் 5 வரையிலான நாட்கள், ராஜ்ஹரா பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 150 பேர் பங்கேற்றனர். மேலும்,  ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தினங்கள் மகுவாத்தாண்ட் பணித்தளத்தில் நடைபெற்ற கூட்டங்களைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூட்டங்களில், சகோ. சரவணன், சகோ. முகேஷ், சகோ. ஜோபி, சகோ. மார்ட்டின் மற்றும் சகோ. பிரவீன் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். பணித்தளங்களில் நடைபெறும் வாலிபர் ஊழியங்களுக்காகவும், உயர்கல்விக்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

மே 19 ஸ்ரீலங்கா, பொரடோலி, N.ர்.P.ஊ மற்றும் பத்கடோலி ஆகிய கிராமங்களில் சுவிசேஷக் கூட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, டோர்பா பணித்தளத்தில் நடைபெற்ற இளைஞர் முகாமிலும் அருகிலிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த வாலிபர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். நற்செய்திக் கூட்டங்களில் பங்குபெறுவோரின் வாழ்க்கையில் கர்த்தர் கிரியை செய்யவும், பாவக்கட்டுகளிலிருந்து அவர்கள் விடுதலை பெறவும் ஜெபிப்போம். 

மே 20 ஏப்ரல் 10, 11, 12 ஆகிய தினங்கள் உமரியா பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில், 275 பேர் கலந்துகொண்டு, தேவ வார்த்தையைக் கேட்டதுடன், பல்வேறு ஜெபக்குறிப்புகளுக்காகப் பாரத்துடன் ஜெபித்தனர். கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 55 பேர் உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை அறிக்கைசெய்தனர்; தேவனுக்கே மகிமை!