செப் 16 ஜார்கண்ட் மாநிலம், ஹைதர்நகர், முகமத்கஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டங்களில் 305 விசுவாசிகள் பங்கேற்றனர். சகோ. சரவணன் மற்றும் சகோ. சஞ்சய் ஆகியோர் தேவவார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். கோடோலி பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் வாலிபர் கூட்டத்தில், கோடோலி மற்றும் மல்காபூர் பணித்தள வாலிபர்கள் பங்கேற்றனர்; 'கிறிஸ்துவுக்குள் உறுதியாயிருங்கள்" என்ற தலைப்பின் கீழ், சகோ. மேக்நாத் பவார் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோர் விசுவாசத்தில் உறுதியாக நிற்க ஜெபிப்போம்.
செப் 17 ராஜ்ஹரா, போச்ரா மற்றும் பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளில் 370 பேரும், தொடர்ந்து சத்தர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 200 பேரும் பங்கேற்றனர். மேலும், டோர்பா பணித்தளத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தின் வாயிலாகவும், பகாஸ்பூர் பணித்தள கிராம ஊழியங்கள் மூலமாகவும் அநேகருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். ஜப்லா பணித்தளத்தில் நடைபெற்ற இரவு ஜெபக்கூட்டத்தில் 150 பேர் கலந்துகொண்டு தேசத்திற்காகவும் மற்றும் பணித்தள ஊழியங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். வரும் நாட்களில் பணித்தளங்களில் செய்யப்படவிருக்கும் நற்செய்திப்பணிகளுக்காக ஜெபிப்போம்.
செப் 18 தஸ்ரார், ஜர்ஹா, சிரையாகாந்த் மற்றும் பெத்;லா ஆகிய பணித்தளங்களிலுள்ள ஜெம்ஸ் பகற்பாதுகாப்பு மையப் பள்ளிகளிலும் மற்றும் நக்வா, சியாங்கி, ரக்பி மற்றும் உதய்நகர் போன்ற பகுதிகளின் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மற்றும் கோமோஹ், டும்ரி மற்றும் தெதுல்மாரி பணித்தளங்களிலும் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக 944 சிறுவர் சிறுமியரைச் சந்திக்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் மற்றும் வாலிபர் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.
செப் 19 போச்ரா பணித்தளத்தில் கட்டப்பட்ட ஜெம்ஸ் சீஷத்துவப் பயிற்சி மையம் ஜெபத்துடன் அர்ப்பணிக்கப்பட்டது. கோமோஹ் பணித்தளத்தில் நடைபெற்ற ஊழியர்கள் ஐக்கியக் கூட்டத்தில், ஊழியர்கள் இணைந்து ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கவும், எதிர்கால ஊழியங்களைத் திட்டமிடவும் கர்த்தர் கிருபை செய்தார். சிப்;ன் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டங்களில், பணித்தள மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்; போதகர் சந்திரா சாமுவேல் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அஞ்சல் வழி வேதாகமக் கல்வி ஊழியங்களுக்காகவும், அதில் பங்கேற்கும் விசுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.
செப் 20 பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 12 பேர், உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டனர்; தேவனுக்கே மகிமை! பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளுக்காகவும், ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.
