August 2026

 



ஆகஸ்ட்-17 ஜார்க்கண்ட் கோட்டத்தின் பிப்பார்டி பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 25 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஜப்லா பணித்தளத்தில் நடைபெற்ற இரவுக் கூட்டத்தில், 150 பேர் கலந்துகொண்டு தேசத்திற்காகவும் மற்றும் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் ஊழியங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், ஆலயமில்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட்-18 முகமத்கஞ்ச், ராஜ்ஹரா, சரம்ரோஹா, தேவ்கான் பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளில் 370 பேர் பங்கேற்றனர். இவ்வுபவாசக் கூடுகைகளில் தேசத்திற்காகவும், பணித்தளச் சபை ஊழியங்களுக்காகவும், ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காகவும் மற்றும் பல்வேறு ஜெபக் குறிப்புகளுக்காகவும் ஒருமனதாக இணைந்து ஜெபிக்க தேவன் கிருபை பாராட்டினார். பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் நற்செய்திப்பணிகளுக்காகவும், ஊழியத்திற்கு உண்டாகும் தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட்-19 கும்லா பணித்தளத்தில் ஜுலை 11 அன்று நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 150 விசுவாசிகள் பங்கேற்று தேவ வார்த்தையைக் கேட்டனர். இக்கூட்டத்தில், 'விசுவாசத்தைக் காத்துக்கொள்" என்ற தலைப்பின் கீழ் சகோ. சாலமோன் (மதுரை) கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட வாலிபர் மற்றும் பெரியோர் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்க ஜெபிப்போம்.

ஆகஸ்ட்-20 ஜுலை 13 மற்றும் 14 ஆகி இரு தினங்கள், 'பாவத்திற்கு விலகியோடு" என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 90 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர்; இக்கூட்டங்களில், ஜெம்ஸ் வாலிபர் ஊழியக் குழுவினர் பாடல்கள் மற்றும் ஆராதனைகளில் வாலிபரை வழிநடத்த, சகோ. அமித்தா வாலிபர்களுக்கேற்ற செய்தியையும் ஆலோசனைகளையும் வேதத்திலிருந்து பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற வாலிபரில் 10 பேர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்து, ஆலய ஆராதனையில் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர்; தேவனுக்கே மகிமை! 

ஆகஸ்ட்-21 சித்தி, ராஜ்கட், உமரியா, சத்னா, கரா, சோன்பர்சா, லாரி, பைதன், சக்திநகர் மற்றும் எட்டு பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் வாயிலாக, 735 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 6 பேர் உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! சிறுவர்கள் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும், குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.