அக்டோபர் 19 செப்டம்பர் 6 அன்று சியாங்கி மைதே பகுதியல் நடைபெற்ற சிறுவர் ஊழியத்தின் வாயிலாக 50-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். ரத்னகிரி பணித்தளத்தில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 10 பேர் பங்கேற்றனர். பணித்தளங்களில் வரும் நாட்களில் செய்யப்படவிருக்கும் சிறுவர் மற்றும் பெண்கள் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.
அக்டோபர் 20 மகுவாதத் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் சிறப்புக் கூட்டத்தில் 70 பேர் பங்கேற்றனர். 'புதியதும் ஜீவனுள்ளதுமான வழி" என்ற தலைப்பின் கீழ் சகோ. சரவணன் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார்; அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டனர். கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 22 பேர் உடன்படிக்கையின் மூலம் மந்தையில் இணைந்தனர்; தேவனுக்கே மகிமை! பணித்தளங்களில் வாலிபர்கள் சந்திக்கப்படவும், போதை வஸ்துகளிலிருந்து விடுவிக்கப்படவும் ஜெபிப்போம்.
அக்டோபர் 21 துதி பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 200 பேர் கலந்துகொண்டனர். சகோ. ராகேஷ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். செப்டம்பர் 11 அன்று கிவாஹி மற்றும் கடோலி பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக சிறுவர் சிறுமியரை கிறிஸ்துவின் அன்பில் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். ஆலயமில்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயம் கட்டப்பட ஜெபிப்போம்.
.jpg)