நவம்பர் 16 முகமத்கஞ்ச், சத்தர்பூர், ஜப்லா மற்றும் ராஜ்ஹரா பணித்தளங்களில் 'விழித்தெழு" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற சிறப்புக் கூட்டங்களில் 1440 பேர் பங்கேற்று வசனனத்திற்குச் செவிகொடுத்து, ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலனடைந்தனர். இக்கூட்டங்களில் பின்மாரி வேதாகமக் கல்லூரியின் நிறுவனர் சகோ. ஜோயல் கர்த்தருடைய வார்த்தையப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றோர்க்காக ஜெபித்தார்.
நவம்பர் 17 சிசாய் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கூடுகையில் 30 சகோதரிகள் பங்கேற்றனர். சகோதரி அமிதா தேவ வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றோரை ஜெபத்தில் வழிநடத்தினார். பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற ஆறு பேர் உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டனர்; தேவனுக்கே மகிமை!
நவம்பர் 18 தஸ்ரார், கர்வா, சந்தனா, ஹைதர்நகர், சிராயதாட், மெரால் ஆகிய பணித்தளங்களில் கடந்த நாட்களில் நற்செய்தி ஊழிய குழுக்கள் மூலம் (Good News Club) நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் வாயிலாக 394 சிறுவர் சிறுமியருக்கு வேதவசனங்கள், வேதாகமச் சம்பவங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் சிறுவர்கள் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும், அவர்களது குடும்பங்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.
நவம்பர் 19 அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தினங்கள் கும்லா பணித்தளத்தில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில் 240 பேர் பங்கேற்றனர். பணித்தளத்திற்கு வருகைதந்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த போதகர்கள், 'பற்றிக்கொண்டிரு" என்ற தலைப்பின்கீழ் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். இக்கூட்டங்களில் பலர் தங்கள் வியாதியிலிருந்து விடுதலை பெற்று, சாட்சி கூறி தேவனை மகிமைப்படுத்தினர். பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் சுவிசேஷ மற்றும் கைப்பிரதி ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.
நவம்பர் 20 அக்டோபர் 12 அன்று நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 250 பேர் ஒன்றுகூடி தேசத்திற்காகவும், தேசத்தில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும், ஆத்துமாக்கள் சந்திக்கப்படவும் பாரத்துடன் ஜெபித்தனர். தொடர்ந்து, 14 மற்றும் 15 ஆகிய தினங்கள் ஜப்லா பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும் 150 பேர் பங்கேற்று தேசத்திற்காக ஜெபித்தனர். பணித்தளங்களில் ஆத்துமாக்கள் தேவனை கண்டுகொள்ள ஜெபிப்போம்.

.jpg)