தெற்கு மண்டலம்
• மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரையிலான நாட்கள் ஆகாய் ஊழியர்கள் மூலமாக வாரனாசியில் நடைபெற்ற தலைவர்களுக்கான பயிற்சியினை கர்த்தர் ஆசீர்வதித்தார். தலைமைத்துவத்திற்கான பண்புகளைப் பெருக்கிக்கொள்ளவும், வசனத்தின் அடிப்படையில் முன்மாதிரியாகத் தங்களைக் காண்பிக்கவும் பங்கேற்றவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
• பிஞ்சரடிப்பா பணித்தளத்தில் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தினங்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 50 விசுவாசிகள் பங்கேற்றனர்.
• போச்ரா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில் 65 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். சகோ. சாம் ரிச்சர்டு, சகோதரி பூணம் ஹல்டா மற்றும் சகோதரி ஹெப்சி ஆகியோர் இக்கூடுகையில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற ஆலோசனைகளை வழங்கினர்.
• வனாஞ்சல் கோட்டத்தின் லோஹிங்கா பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் கூடுகையில் 50 பேர் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கப்பட்டனர்.
• ராஜ்ஹரா பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும், தொடர்ந்து, ஜப்லா பணித்தளத்தில் நடைபெற்ற இரவு ஜெபக் கூடுகையிலும் மற்றும் முகமதுகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகையிலும் பணித்தள மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.
• கடந்த மாதத்தில், 12 பேர் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை!
• அன்பரா பணித்தளத்தில் பல்வேறு எதிர்ப்புகளின் நிமித்தம் ஆலய ஆராதனை தடைபட்டதைத் தொடர்ந்து, வீடுகளில் தொடங்கப்படவிருக்கும் ஜெபக்கூடுகைகளுக்காகவும் மற்றும் இப்பணித்தளத்தின் சமுதாயப் பராமரிப்பு மையத்தின் சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
• எதிர்ப்புகளின் மத்தியிலும், லௌரி, ரீவா, உமரியா, கோன் மற்றும் சோப்பன் ஆகிய பணித்தளங்களில், 30 ஆத்துமாக்கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு கிறிஸ்துவின் மந்தையில் சேர்ந்தனர்; தேவனுக்கே மகிமை!
• பணித்தளங்களில் விசுவாசிகளுக்கு உண்டாகும் நெருக்கங்கள் மற்றும் சவால்கள் மாறவும், எதிர்ப்போர் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.