தெற்கு மண்டலம்
ஜுலை 17 பக்கர் டோலி, சொர்குடா மற்றும் குட்டுவாபனிடால் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட விடுமுறை வேதாகமப்பள்ளி ஊழியங்களின் மூலமாக, 316 சிறுவர் சிறுமியருக்கு, கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், தொடர்ந்து, ஹைதர் நகர்,மியாவோ,முகமத்கஞ்ச்,ஜப்லா மற்றும் சகிதாபாத் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக 604 சிறுவர் சிறுமியரைச் சந்தித்து கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இச்சிறு பிள்ளைகளின் மூலமாக அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கிறிஸ்துவை அறிந்துகொள்ள ஜெபிப்போம்.
ஜுலை 18 பணித்தளங்களில், புதிதாக இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களுக்காக நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 30 விசுவாசிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படைச் சத்தியங்களைப் போதித்து, அவர்களது குடும்பங்களுக்காக ஜெபிக்க கர்த்தர் உதவிசெய்தார். சமுதாயத்தில் இவர்கள் கிறிஸ்துவுக்காக எழுந்து பிரகாசிக்கவும், தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், குடும்பத்தாருக்கு சாட்சியாக விளங்கவும் ஜெபிப்போம்.
ஜுலை 19 ஜப்லா பணித்தளத்தில், ஜுன் 1 அன்று நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 200 பேர் கலந்துகொண்டு, பணித்தள மக்களுக்காகவும், பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். தொடர்ந்து, ஜுன் 4 மற்றும் 5 ஆகிய தினங்கள், ஜப்லா மற்றும் சத்தர்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்களில் 120 பேரும், மற்றும் ஜுன் 11 மற்றும் 13 ஆகிய தினங்கள் கட்டோலி பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 50 பேரும் கலந்துகொண்டனர். பணித்தள விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் மற்றும் ஆத்துமபாரத்திலும் வளரவும், தங்கள் குடும்பத்தினரை கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தவும் ஜெபிப்போம்.
ஜுலை 20 பிஞ்சரடிப்பா பணித்தளத்திற்குட்பட்ட மட்கடியா கிராமத்தில் நடைபெற்ற சகோதரர் சுதின் கடியாவின் குழந்தை அர்ப்பணிப்பு ஆராதனை, குடும்பத்தாருக்கும் மற்றும் அக்கிராமத்து மக்களுக்கும் ஆசீர்வாதமாக அமைந்தது. இவ்வாராதனையின்போது, குழந்தையை அர்ப்பணிக்கவும் மற்றும் கலந்துகொண்ட மட்கடியா கிராமத்தினர் 30 பேருக்கு கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார். இக்கிராமத்தினரின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.
ஜுலை 21 ஜப்பன் பணித்தளத்தில், 70 பேரைச் சந்தித்து கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவிக்கவும் மற்றும் அவர்களுக்கு ஒருவேளை ஆகாரம் அளிக்கவும் மற்றும் ஜுன் 15 அன்று துசேரா பணித்தளத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களின் மூலமாக 100 பேருக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளங்களில் சுவிசேஷத்திற்கு வரும்நாட்களில் திறந்த வாசல் உண்டாகவும், இப்பணித்தளத்தில் முன்னெடுக்கப்படும் நற்செய்திப்பணிகள் பலன்களைத் தரவும் ஜெபிப்போம்.